கலைஞர் டி.வி.யின் பகாசுர பசிக்கு தப்பிய ஒன்றிரண்டு கொசுறுகள் மட்டுமே பிற தொலைக்காட்சிகளுக்கு. இந்த உண்மை புரிந்து, படங்களின் ஒட்டு மொத்த உரிமைகளை வாங்க ஆரம்பித்துள்ளது சன் குழுமம்.
'காதலில் விழுந்தேன்', 'சிவா மனசுல சக்தி', 'தெனாவட்டு', 'பூக்கடை ரவி' ஆகிய படங்களி்ன் ஒட்டுமொத்த உரிமையை வாங்கி தனது கணக்கை தொடங்கியது சன் பிக்சர்ஸ்.
அதன் வழியை விரைவில் தமிழில் ஒளிபரப்பை தொடங்க இருக்கும் ஜீ (Zee) தொலைக்காட்சி பின்பற்றுகிறது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
பதிமூன்று கோடியில் தயாரானதாக பாலா சொல்லும் இப்படத்துக்கு ஜீ கொடுத்திருப்பது பதினாறு கோடிகளாம்.
ஓடுற நாய்க்கு ஒரு முழம் முன்னால் கல் என்பது இதுதானா?
|