'முதல் முதல் முதல்வரை' படம் பார்த்தவர்கள், கீவ்னா போட்ட கெட்ட ஆட்டத்தில் நிச்சயம் கிறங்கியிருப்பார்கள். இவரின் தோற்றத்தையும், இன்னபிற சாமாச்சாரங்களையும் கவனித்தால் வெளிநாட்டுக்காரர்போல இருப்பார். ஆனால், நம்மூரு பொண்ணாம் இவர். யெஸ். கீவ்னாவின் சொந்த ஊர் திருநெல்வேலி.
சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றவர் MBBS படித்து டாக்டராக திரும்பியுள்ளார். மருத்துவம் படித்துக்கொண்டிரு்தபோதே மாடலிங், நாடக நடிகை என கலைத்துறைமீது காதல் கொண்ட இந்த டாக்டரின் மெயின் புரபஷன் (Profession) இப்போது ஆக்டிங்தானாம்.
'நான் இங்கிலாந்தில்... படிச்ச ஆளு...' என்று பந்தாவெல்லாம் காட்டாமல் 'ல'கரம் 'ர'கரம் பிசகாமல் தமிழில் பின்னியெடுக்கிறார். 'முதல் முதல் முதல்வரை' படத்தின் டப்பிங்கும் இவரே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சினிமா ஆசை எப்படி வந்தது?
மகேந்திரன், பரதன் போன்ற இயக்குனர் ஜாம்பவான்கள் எனது தந்தையின் நண்பர்கள். சின்ன வயதில் அவர்களின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அந்த படங்களின் தாக்கம்தான் எனக்குள் நடிப்பாசையை விதைத்தது. ஒளி்பபதிவாளர் சந்தோஷ்சிவன் மூலம் இயக்குனர் கிருஷ்ணன் சேஷாத்திரியின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக இப்போ நடிகையாக அறிமுகமாகிட்டேன் என்னும் கீவ்னா கிளாமரா நடி்பபதில் தவறில்லை என்கிறார்.
எழுத்திலும், இயக்கத்திலும் ஆர்வமுள்ள கீவ்னா, மணிரத்னம், அமீர், வெங்கட் பிரபு, வெற்றி மாறன் போன்றவர்களின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தனது ஆசையை பட்டியல் போடுகிறார்.
|