சரண் இயக்குகிறார். காஜல் அகர்வால் கதாநாயகி. சரணுக்கு பிறமொழி மீது என்ன மோகமோ. மோதி விளையாடில் நடிக்கும் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
நாயகன் வினய் கர்நாடகம். காஜல் அகர்வால் வடக்கு. வில்லனாக நடிக்கும் அமீத்தாவன் மும்பை. கலாபவன் மணியும், ஹனிபாவும் கேரளா. கண்ணில் பட்ட ஒரேயொரு தமிழர் சந்தானம்.
கலாபவன் மணிக்கு இதில் நல்ல வேடமாம். 'ஜெமினி' மூலம் மணிக்கு மணிமகுடம் சூட்டிய இயக்குனர் அல்லவா சரண். அதனால் கூப்பிடுகிற நேரமெல்லாம் ஓடி வந்து நடிக்கிறார். இதே கலாபவன் மணி கால்ஷீட் இல்லாததால் ராஜூ ஈஸ்வரனின் 'பஞ்சாமிர்த'த்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த ஊர் பெங்களூர் என்பதால் வினய்க்கு தமிழ் தகராறு. இதுவரை டப்பிங் குரல்தான். படப்பிடிப்பில் வினய்யின் குரலை கேட்ட சரண், நீங்களே டப்பிங் பேசலாமே என உசுப்பி வி்ட்டுள்ளார். இந்த உசர நடிக்ரும் முதல் முறையாக தமிழில் டப்பிங் பேச தயாராகி வருகிறார்.
|