'என்னைத்தெரியுமா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசியபோதுதான் சிம்புவிடமிருந்து தலைக்கனம் எட்டிப்பார்த்தது.
அவரது பேச்சு வருமாறு:-
"படத்தின் நாயகன் மனோஜ் எனது நெருங்கிய நண்பர். ரஜினி சாருக்கு மனோஜின் தந்தை மோகன்பாபு எப்படி நண்பரோ அதேபோல்தான் எனக்கும் மனோஜ் இடையே உள்ள நட்பு. இவ்விழாவிற்கு ரஜினி சார் வரவில்லை. ஆனால் நான் வந்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் இடம் பெறும் 'தண்ணி கருத்துடுச்சு...' பாடலை பாடியது நான்தான். மனோஜ் விரும்பி கேட்டுக்கொண்டதால் நான் பாடியுள்ளேன். பாடல்களையெல்லாம் பார்த்தபோது இது நிச்சயம் வெற்றி்ப்படமாக அமையும் என்று தோன்றுகிறது. இயக்குனர் அஜய் சாஸ்திரியும் மிகவும் திறமையானவர். படத்தின் மேக்கிங் புதிய ஸ்டைலில் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால்தான் அது ஓடும்.
இப்போதெல்லாம் மக்கள் தெளிவாயிருக்காங்க. கதை நல்லா இருந்தால்தான் படம் பார்க்கிறார்கள். நீங்க யாரா இருந்தா என்ன? நல்ல படத்தை தாங்க (ரஜினியின் குசேலனை உரசி போகிறது சிம்புவின் பேச்சு) என தூக்கியெறிய ஆரம்பிச்சுட்டாங்க
இனி சூப்பர் ஸ்டாராக ஆகவேண்டும் என ஆசைப்படும் நடிகர்களுக்கு கதை ஞானம், டைரக்ஷ்ன் திறமை வேண்டும். அப்போதுதான் பெரிய இடத்துக்கு வரமுடியும். எல்லா திறமையும் இருக்கும் நடிகர்களே வெற்றிபெற முடியும்" என்றார்.
ஆக சிம்புவின் பேச்சில் சூப்பர் ஸ்டாருடன் தன்னை சமன்படுத்தி பார்க்கும் இறுமாப்பும், இளம் நடிக்ர்களில் தனக்கு மட்டும் டைரக்ஷ்ன் திறமை இருக்கிறது என்ற சுட்டிக்காட்டலும் இருப்பதை தெரிந்து கொள்ளவும்.
|