பாக்யராஜின் மகன் சாந்தனு இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரே பழகிய முகம்.ஏ.ஆர்.ரஹ்மான். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தாணுவின் மகனும் இயக்குனருமான கலாபிரபு.
நான் இசையமைப்பது என்றால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிவரும் என்று இசைப்புயல் கூறியதையும் ஏற்றுக் கொண்டார் கலாபிரபு. 'சக்கரகட்டி' படம் தயாராகியும் வெளியாவதில் தாமதமாக இதுவே காரணம். தரமான பாடலுக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்தானே.
'சக்கரகட்டி'க்கு தற்போது விலாசமாக இருப்பதே இசைப்புயலின் பாடல்கள்தான். சிலநாட்கள் முன் வெளியான இப்பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்புகின்றன. குறிப்பாக 'டாக்ஸி டாக்ஸி...' பாடல். இந்தப் பாடலின் பாப்புலாரிட்டியைப் பார்த்து இதனை மட்டும் ரீ-ஷூட் செய்துள்ளார்கள். ஒரு பாடல் முழுக்க கிராபிக்ஸ் செய்துள்ளது இன்னொரு ஹைலைட்.
நாளை வெளியாகும் இப்படத்திற்கு சென்சார் 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
|