திருமண செய்தி வதந்தி - சங்கீதா
- 27.09.2008
By JBR
பின்னணி பாடகர் கிரிஷை சங்கீதா திருமணம் செய்ததாக கோலிவுட்டில் பரபரப்பு. இந்த செய்தி உண்மையா? வந்த செய்தியை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர்.
|
|
|
இது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு அம்மாவின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்திருப்பதாகவும், ஆனால் திருமணம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார். ஒருவரை காதலித்து வருவது நிஜம்தான் என்று ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தார் சங்கீதா.
அதே கருத்தை தெரிவித்த கிரிஷ், சங்கீதாவை காதலிப்பது உண்மை. ஆனால் திருமணம் நடந்ததாக கூறுவது வதந்தி என்றார். பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் நடக்கும் என்றார், அவர் மேலும் கூறினார்.
திருமணம் நடந்தாலும் தொடர்ந்து நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார் சங்கீதா. இதனை அவரே தெரிவித்துள்ளார்.
|