மலையாளத்தில் படத்தை இயக்கிய ரஞ்சித் தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார்.
ப்ருத்விராஜ், ரேவதி, நவ்யாநாயர் நடித்த இப்படம் வெகுளியான வேலைக்கார பெண்ணை பற்றியது. குருவாயூருக்கு அருகே வீட்டு வெலைக்காக வருகிறார் நவ்யாநாயர். இடைவிடாத வேலையின் காரணமாக குருவாயூர் கோயிலுக்கு போக வேண்டும் என்கிற அவரது ஆசை நிறைவேறாமல் தள்ளிப்போகிறது. இந்த எளிய பெண்ணிற்காக குருவாயூரப்பனே நேரில் வந்து காட்சி தருகிறார்.
அத்துடன் ப்ருத்விராஜ், நவ்யாநாயர் காதலையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருந்த விதம் அருமை. ப்ருத்விராஜின் அம்மாவாக இதில் நடித்திருந்தார் ரேவதி. மலையாளத்தில் பல விருதுகளை இப்படம் பெற்றது.
தமிழ் ரீ-மேக்கில் ப்ருத்விராஜூம், ப்ரியாமணியும் நடிக்கின்றனர். இதில் கடவுளாக நடிக்க தனுஷிடம் கேட்டிருக்கிறார் இய்ககுனர் ரஞ்சித். தனுஷூம் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.
|