ஹீரோவின் அம்மாவாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் பாலக்காடை சேர்ந்தவர். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மலையாள இயக்குனர் லோகிததாஸ். 'பொய் சொல்லப் போறோம்' இவருக்கு முதல் தமிழ்ப் படம்.
'எல்லாம் அவள் செயல்', 'லீலை' படங்களில் நடித்து வரும் இவர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஈரம்' படத்தில் நடிக்கிறார். எப்படிப்பட்ட வேடம் என்று கேட்டால் அசந்து போவீர்கள். படத்தில் இவர் வி்ல்லியாக வருகிறாராம். இதனால் இமேஜ் பாதிக்காதா?
அதுபற்றி லட்சுமிக்கு கவலையில்லை. இவரது விருப்பம் ராதிகா, சுஹாசினி போல் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதுதானாம்.
சமுத்திரகனியின் 'நாடோடிகள்' படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்க பேச்சுவார்ததை நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவுக்கு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கிடைத்திருக்கிறார்.
|