Powered By CineSouth.com
All rights reserved
பொங்கல் ரிலீஸ்
தீபாவளிக்கு அடுத்து அதிக படங்கள் வெளியாவது, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில். இந்தவருட பொங்கலுக்கு ஏழு திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமாதங்களாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் லுங்குசாமியின் 'பீமா' பொங்கலுக்கு வெளியாகிறது. சிம்புவின் 'காளை' மாதவனின் 'வாழ்த்துகள்' பரத்தின் 'பழனி' ஆகியவையும் பொங்கல் போட்டிக்கு தயார். இவற்றுடன் அறிமுக இயக்குனர் கனகுவின் 'பிடிச்சிருக்கு' மற்றும் 'தொடக்கம்' படமும் பொங்கலுக்கு திரையரங்குக்கு வருகிறது.
பீமா
இயக்கம்: லிங்குசாமி
நடிப்பு: விக்ரம், த்ரிஷா

ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு, கனல் கண்ணன் சண்டைப்பயிற்சி என வலுவான தொழில்நுடபக்கலைஞர்களின் கூட்டணி 'பீமா' வின் பலம். விக்ரம் படத்தின் கதாபத்திரத்துக்காக செலவிட்டிருக்கும் உழைப்பு, அவரது ஒவ்வொரு புகைப்படத்திலும் பளிச்சிடுகிறது. ஷெரின் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் 'பீமா' தமிழ்சினிமாவின் திருப்பு முனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
-----
காளை

இயக்கம்: தருண்கோபி
நடிப்பு: சிம்பு, வேதிகா
பொழுதுபோக்கை பிரதானமாக கொண்டிருக்கும் 'காளை' தருண்கோபியின் இன்னொரு ஆக்ஷ்ன் படைப்பு. நிலா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரே 'காளை'க்கும் ஒளிப்பதிவு. G.V.பிரகாஷ் இசை. சங்கீதாவின் அத்தை கேரக்டர் விமர்சனத்தை கிளப்பும் என்கிறார்கள்.
-----
வாழ்த்துகள்

இயக்கம்: சீமான்
நடிப்பு: மாதவன், பாவானா
'தம்பி' யில் மாதவனை ஆக்ரோஷமாக காட்டிய சீமான், 'வாழ்த்துகளில்' அவரை ரொமான்டிக் நாயகனாக்கியிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமாரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது 'வாழ்த்துகளின்' பலம்.
------
பழனி

இயக்கம்: பேரரசு
நடிப்பு: பரத், காஜல் அகர்வால்
பேரரசுவின் இன்னொரு கமர்ஷியல் பஞ்சாமிர்தம். பரத்தின் அக்காவாக குஷ்பு நடித்திருக்கிறார். வழக்கம்போல அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் பேரரசு. பன்ச் டயலாக், பரபர பைட், சென்டிமெண்ட் பாப்கார்ன் என அறுசுவை உண்டி, இந்த 'பழனி.'
------
'பிரிவோம் சந்திப்போம்'

இயக்கம்: கரு.பழனியப்பன்
நடிப்பு: சேரன், சினேகா
இதுவரை அழுதுவடியும் சேரனையே திரையில் பார்த்திருக்கிறோம். இதில் முற்றிலும் மாறுபட்ட கலகல சேரனை பார்க்கலாம். வித்யாசாகர் இசையில் இலக்கண சுத்தமாக கவிஞர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். சேரனுடன் சினேகா ஜோடி சேரும் இரண்டாவது படம்.
------
பிடிச்சிருக்கு

இயக்கம்: கனகு
நடிப்பு: அசோக், விசாகா
வன்முறை, ஆபாசம் இல்லாத காதல், குடும்பக் கதை. ஹீரோயின் தெலுங்கிலிருந்து அழைத்து வரப்பட்ட விசாகா. கதை, திரைக்கதையின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கும் படம். மனு ரமேஷன் எனும் புதுமுகம் இசையமைத்திருக்கிறார்
------
தொடக்கம்
இயக்கம்: ஆர். முத்துக்குமார்
நடிப்பு: ரகுவண்ணன், மோனிகா

வெளிநாட்டு மோகத்தால் சீரழியும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் படம். நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். மோனிகா, மேகா நாயர் நடித்துள்ள இப்படத்தை விஜயேந்திரா புரொடக்ஷ்ன் தயாரித்துள்ளது.
---------